சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு

25-67c5e46c09ce7.jpeg

மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு வேண்டும் – சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்�

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு தாக்குதலை 10பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார்,புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே வாள்வெட்டுத்தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்று மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இன்று ஆரையம்பதி பகுதியில் வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று மாலை மட்டக்களப்பு நகருக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்த்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *