இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி சம்பியனாகி வெற்றி வாகை சூடியது.
மட்டக்களப்பு மண்ணுக்குப்
பெருமை சேர்த்த கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணியினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு குறித்த வரலாற்றுச் சாதனையை அடைவதற்கு உறுதுணையாக நின்று செயற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள், கழக நிர்வாகத்தினருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர்
ஸ்ரீநாத் நேரில் சென்று தெரிவித்தார்.
