புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு

images.jpeg

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

புதிய கடவுச்சீட்டில் சில இடங்களின் பெயர்களில் கூட எழுத்துப் பிழைகள் உள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் போது எழுந்த கடவுச்சீட்டு பிரச்சினை இன்னும் அப்படியே உள்ளதாகவும், மக்கள் அவற்றை பெறுவதற்கு அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வந்தவுடன் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறியிருந்தும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த தீர்வும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

கடவுச்சீட்டு பெற இருபதாயிரம் கொடுக்கிறோம். பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்கள் உள்ளன. புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் உள்ளன. ஆனால் செலவு அதேதான்.

அதன்படி, புதிய கடவுச்சீட்டில் 16 பக்கங்கள் குறைவாக உள்ள நிலையில் ஒரு நபருக்கு ரூ.6697 இழப்பு ஏற்படுகிறது.

முந்தைய அரசாங்கத்தால் செய்யப்பட்ட இந்த விடயங்களை இன்னும் தடுக்க முடியவில்லை.

புதிய கடவுச்சீட்டில் உள்ள பாதுகாப்பு எண் சரியான இடத்தில் இல்லை.

யாராவது இது குறித்து நீதிமன்றத்திற்குச் சென்றால், புதிய கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்றார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *