தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

images-2.jpeg

பல காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை சபையில் சமர்ப்பித்த இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (28) ந உரையாற்றுகையிலேயே சிறீதரன் எம்.பி குறித்த பெயர் பட்டியலை சமர்ப்பித்தார்.

மேலும் அவர், ”கதிர்காமத் தம்பி சிவக்குமார், விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார், ஜோன்ஷன் கொலின் வெலன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச்.உமர் ஹதாப், தங்கவேலு நிமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பிஐயா பிரகாஸ் ஆகியோரில் இரண்டு பேர் 30 வருடங்களாகவும், மூவர் 17 வருடங்களும், ஒருவர் 22 வருடங்களாகவும் மற்றும் நான்கு பேர் 16 வருடங்களாக சிறையில் வாடுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *