சென்னை அண்ணா சாலையில் குலுங்கிய 5 மாடி கட்டடம்! நில அதிர்வு என அலறி ஓடிய பணியாளர்கள் சென்னை அண்ணா சாலையில் 5 மாடி கட்டடம் குலுங்கியதாக கூறி அங்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து
�
பாதிக்கப்பட்டது.சென்னை அண்ணா சாலையில் 5 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தனர். அப்போது பகல் 12 மணி அளவில் 5 மாடி கட்டடம் லேசாக குலுங்கியதாக தெரிகிறது.இதனால் பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தேசிய புவியியல் அமைப்பு கூறுகையில் ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.
