இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்தவர்களில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
ஏனைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த நபர் 34 வயதுடைய கந்தேயாக, மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
