மர்மமான முறையில் உயிரிழந்த 19 வயதுடைய யுவதி புத்தளம் கல்லடி பிரதேசத்தில்

large_hfhf-18840.jpg

புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 19 வயதுடைய யுவதி புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, யுவதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்கள் அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது யுவதியை சோதனையிட்டு பார்த்த வைத்தியர்கள், யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

யுவதியின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *