26 February 2025 Wednesday. Pothikai.fm
)💐aries-மேஷம்
மேஷராசி நண்பர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
💐taurus-ரிஷபம்
ரிஷபராசி நண்பர்களே உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
💐gemini-மிதுனம்
மிதுனராசி நண்பர்களே இன்று தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
💐cancer-கடகம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.
💐leo-சிம்மம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவுகளும் வரவுக்கு மீறி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
💐virgo-கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
💐libra-துலாம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
💐scorpio-விருச்சிகம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
💐sagittarius-தனுசு
இன்று மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.
💐capricorn-மகரம்
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
💐aquarius-கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.
💐pisces-மீனம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.
🍂Astro’V,Palaniyappan 🍂
🌿#Gobichettipalayam 🌿
🌹9942162388🌹
தேதி
Date 14 – மாசி – குரோதி
புதன்
இன்று
Today சுபமுகூர்த்த நாள்
மகாசிவராத்திரி
நல்ல நேரம்
Nalla Neram 09:30 – 10:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 10:30 – 11:30 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 12.00 – 01.30
எமகண்டம்
Yemagandam 07.30 – 09.00
குளிகை
Kuligai 10.30 – 12.00
சூலம்
Soolam வடக்கு
Vadakku
பரிகாரம்
Parigaram பால்
Paal
சந்திராஷ்டமம்
Chandirashtamam புனர்பூசம் பூசம்
நாள்
Naal மேல் நோக்கு நாள்
லக்னம்
Lagnam கும்ப லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 41
சூரிய உதயம்
Sun Rise 06:29 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi சதுர்த்தசி
திதி
Thithi இன்று காலை 10:18 AM வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம்
Star இன்று மாலை 04:51 PM வரை திருவோணம் பின்பு அவிட்டம்
சுபகாரியம்
Subakariyam கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
