விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது

download-4-46.jpeg

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாத விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது.பாரிய நிதி மோசடிக்கு இந்நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என பிரதி நிதிஅமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ரோஹண பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் 22 விமானங்கள் உள்ளன. இவற்றில் 3 விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தபடவில்லை ஆனால் அவற்றுக்காக மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *