சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த ஆண்டு டிச.5ஆம் தேதி வெளியானது. இப்படம், வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஐதராபாத் தியேட்டர் வாசல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அல்லு அர்ஜுன் குடும்பத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும், புஷ்பா பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சார்பில் தலா 50 லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்ட பெண்ணின்
�
குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. என்றாலும், இவ்விவகாரம் தெலங்கானா அரசியல் வரை விஸ்வரூபமெடுத்தது. இதையடுத்து, மாநில முதல்வர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.இந்த நிலையில், ’புஷ்பா 2’ படம் தொடர்பான கருத்துகள் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. ‘புஷ்பா 2’ படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போயுள்ளதாக ஹைதராபாத் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி ஆணையத்துடன் நடந்த கலந்துரையாடலின்போது பேசிய அவர், “அரசுப் பள்ளி மாணவர்களை கையாள்வது மிகவும் கடினமாகி வருகிறது. நான் பணி செய்யும் பள்ளியில் பாதிக்கும் மேற்பட்ட
�
குழந்தைகள், புஷ்பா படத்தைப் பார்த்துதான் கெட்டுப் போயுள்ளனர். அந்தப் படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டு, ஆபாசமான முறையில் மாணவர்கள் பேசுகின்றனர். இதெல்லாம் பார்க்கையில் நானே தோற்பதுபோல உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.ஆசிரியரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பயனர் ஒருவர், “ ‘புஷ்பா 2’ போன்ற படங்களைப் பார்த்து, அவற்றால் ஈர்க்கப்படுவதன் மூலம் மாணவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினால், அவர்கள் சினிமாவிலிருந்து உத்வேகம் பெறுவதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், ‘12th Fail’, ’
�
Super 30’, ’Udaan’, ’Anjali’, ’35 CKK’, மற்றும் ’Swades’ போன்ற படங்களை ஒவ்வொரு நாளும் அவர்களுக்காகத் திரையிடுமாறு நான் உங்களை மனதாரக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களில் எத்தனை பேர் அந்தக் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள் என்று பார்ப்போம்” என சவால் விட்டுள்ளார். மற்றொரு பயனர், “இது என்ன முட்டாள்தனம்? மாணவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று சொல்வது ஆசிரியர்களின் வேலை இல்லையா? ஏன் திரைப்படத்தைக் குறை கூற வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
