விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமி

download-1-56.jpeg

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வாக்குமூலம் பதிவு தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் (20) வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

தையிட்டி விகாரையில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டம் தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது.

இதற்காக அழைக்கப்பட்ட மூவரையும் இன்று (20) 12 மணிக்கு சமூகளிக்குமாறு தெரிவித்த பொலிசார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்து அதன் பின்னர் நீண்ட மணி நேரம் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றதாக தெரிவித்தனர்.

குறித்த சட்டவிரோத நிர்மாணம் தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் அரச திணைக்களகங்களிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது என்பது தொடர்பிலும் பொலிசார் பல கோணங்களில் கேள்விகளை எழுப்பியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என்ற விடயத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விகாரை

அகற்றப்தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என்ற விடயத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விகாரை அகற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *