ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;குற்றவாளியை 8 மணித்தியாலங்களில் கைது செய்தமை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் குற்றவாளியான பெண்ணை கைது செய்யவில்லை. இருவரும் நீர்கொழும்புக் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். இதில் துப்பாக்கி சூடு நடத்தியவரை தான் நீங்கள் கைது செய்தீர்கள்.. ஆனால் ஊடகங்களில் நேற்று இரவு செய்திகளில் தெரிவித்திருந்ததன்படி. துபாயில் இருந்து துப்பாக்கிசூடு நடத்தியவரை காட்டிக்கொடுத்ததால் தான் அவரை கைது செய்ததாகவும் நமது திறமையால் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊடகங்களில் அப்படித்தான் கதை இருந்தது.. ஏனெனில் இன்னும் மீதமுள்ள குற்றவாளிப் பெண்ணை கைது செய்ய முடியவில்லையே?
