அரசியல் பழிவாங்கல் இடம்பெறுகிறது சஜித் பிரேமதாச

download-4-37.jpeg

கடுமையான அரசியல் பழிவாங்கல் இடம்பெறுகிறது – சஜித் பிரேமதாச 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, ​​அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு அநுரவோடு என முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதில் அமைந்துள்ளனவா என பார்க்கும் போது இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்குறுதியளித்தபடி கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும் போதே போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் கொள்கை பிரகடனத்தின் பக்கம் 105 இன் படி, மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை கொண்டு வருவோம் என்று கூறப்பட்டாலும், அந்த வாக்குறுதியை கைவிட்டு, இன்று மக்கள் மீது பெரும் அசௌகரியத்தையும் அழுத்த்தையும் சுமத்தி, மக்களுக்கு நலன்புரி ஒதுக்கீடுகளை வரையறுக்கின்ற 2024 நிதி முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் அடிப்படைச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% மட்டுமே, முதன்மை இருப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% மட்டுமே என்றும், உலகில் 10 நாடுகளில் மட்டுமே இத்தகைய வரம்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவை அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல என்றும், தேர்தல்கள் மூலம் கிடைத்த மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *