அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும்.. ஒரு இந்தியர்.. பெரிய தலை எல்லாம் பார்த்து நடுங்குறாங்க.. யார் இவர்?சென்னை: இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அமெரிக்காவின் எப்ஃபிஐ தலைவராக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இதற்கான செனட் வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ளது. அவர் பெரும்பாலும் பதவியை பெறுவது இன்று உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இவரை நியமிக்க கூடாது என்று அமெரிக்காவின் பல்வேறு டாப் தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர். FBI
�
அமைப்பின் பல உறுப்பினர்கள் காஸ் பட்டேலை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அங்கே டிரம்ப் இந்தியர்களை நாடு கடத்தி வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் காஸ் பட்டேலை பார்த்து அமெரிக்காவின் பல தலைகள் அஞ்சி நடுங்கி வருகின்றனர்.இவர் FBI தலைவராக நியமிக்கப்பட்டால் FBI அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று FBI அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர். கடந்த முறை டொனால்ட் ஆட்சியில் அவருக்கும் எஃப்பிஐ தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் நிலவி வந்தன. அந்த மோதல்களை சரி செய்யும் விதமாக இந்த முறை தனக்கு நெருக்கமான.. இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப்
�
காஸ் பட்டேலை அந்த பதவிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதை FBI அதிகாரிகள் பலர் விரும்பவில்லை. இந்த அதிகாரிகள் பலர் FBI பொறுப்பிற்கு பிடன் ஆட்சிக்காலத்தில் வந்தவர்கள். இவர்கள் காஷ் பட்டேல் வந்தால் அதனால் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதன் காரணமாகவே FBI தலைவராக காஷ் பட்டேல் வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்.குஜராத் பின்புலத்தை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் பல அரசு ரீதியான பணிகளை செய்துள்ளார். முக்கியமாக வழக்கறிஞரான இவர்.. பல அரசு தொடர்பான வழக்குகளில்
�
வாதாடி உள்ளார். இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கம்.சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் லிஸ்ட்டை முழுமையாக வெளியிடும் திட்டத்தில் இவர் இருப்பதாக கூறப்படுகிறது. முழுமையாக அந்த லிஸ்டை வெளியிட வேண்டும் என்று எப்ஃபிஐ அமைப்பை கோரிக்கை வைத்து வந்தார். இப்போது அவரே அதன் தலைவராகும் நிலையில் விரைவில் அந்த லிஸ்டை முழுமையாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரை அதிகாரிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே அரைகுறையாக வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த “பலான லிஸ்டில்” சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.�
