குழியில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை

480758537_939462864836852_6356523583275049114_n.jpg

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டார்.!!
குறித்த மயானப் பகுதியில் குழி வெட்டியபோது அண்மையில் மனித எலும்புகள் மீட்கப்பட்டிருந்து. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இன்று விஜயம் செய்த நீதவான் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி குழியில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்பகுதியை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸார், தடயவியல் பொலிஸார்,நல்லூர் பிரதேச செயலர் என பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *