இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் கொழும்பு குற்றப்பிரிவு: – 071-8591727

download-2-42.jpeg

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று (19) குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவியாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

சந்தேக நபரின் விபரம்:-

பெயர்:- பிங்புரா தேவகே இஷாரா செவ்வந்தி
வயது: 25
தேசிய அடையாள அட்டை இலக்கம் :- 995892480V
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம

சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொலைபேசி எண்: – கொழும்பு குற்றப்பிரிவு: – 071-8591727
கொழும்பு குற்றப்பிரிவு OIC:- 071-8591735

இந்த சந்தேக நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ரொக்க வெகுமதி வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *