ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்

download-2-39.jpeg

BAR லைசன்ஸ் விவகாரம் – ரணிலுக்கு எதிராக நீதிமன்றில் மனு
சட்டவிரோதமாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபான விற்பனை உரிமங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி, முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடைபெறும் வரை இந்த உரிமங்கள் வழங்கப்பட்டதனை
இந்த மனு சவால் செய்கிறது.

மனுதாரர்களான மாத்தளையைச் சேர்ந்த தங்கவேலு தர்மேந்திர ராஜா மற்றும் புத்பிட்டியைச் சேர்ந்த பிரசாத் தினுக பிரியதர்ஷன ஆகிய இருவரும் சட்ட ரீதியான மதுபான விற்பனை உரிமைதாரர்கள்.

இவர்கள் இருவருமே உரிமம் வழங்கும் செயல்முறை சட்ட மற்றும் நெறிமுறை தரங்களை மீறி இவ்வாறு மதுபான அனு கூறுகின்றனர்.

இந்த மனுவில் முன்னாள் கலால் ஆணையர் ஜெனரல் எம்.ஜே. குணசிறி, முன்னாள் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சின் செயலாளர், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் வசந்த சமரசிங்க மற்றும் பிமல் ரத்நாயக்க, கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரதிவாதிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனுவின்படி, கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் தேதி வரை மதுபான விற்பனை உரிமங்கள் வழங்குவது வெளிப்படைத்தன்மையற்றதாகவும் சட்டவிரோதமாகவும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த உரிமங்கள் ஜனநாயக தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் அதனுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *