இலங்கையில் சிங்களம் ஆரம்பமான வரலாறு (பாளி மொழி)
Posted onFebruary 18, 2025 byeditor inஇலங்கை
இலங்கையில் சிங்களம் ஆரம்பமான வரலாறு (பாளி மொழி) (மஹாவம்ச அல்லது மஹாவங்ச)
சுருக்கமாக. Mhv.[1] அல்லது Mhvs.[2] என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட
இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும். இது இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீபவம்சம் எனும் நூலை தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த நூல் பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் ஆகும். இதனை
இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கூறிவந்தாலும், முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. அதேவேளை இலங்கையில்
வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் நூலைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன.
இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; “பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது” எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது.
இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொ.ஊ.மு. 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து
விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், பொ.ஊ. 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது.
மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக்
கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர்
1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார்.[3] அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
