யாரும் எந்த மொழியையும் படிக்கலாம் ஆனால்… இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் – எம்பி கனிமொழி இந்தி திணிப்பை எதிர்க்க காரணம் என்ன? சமஸ்கிருதம் படித்தால் என்ன பயன்? கனிமொழி எம்பி கூறிய அதிர வைக்கும் பதில்…! என்ன அது விரிவாக பார்க்கலாம்செய்தியாளர்: ராஜன்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சிஎஸ்ஆர் நிதியுதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சேம நல நிதி வழங்குதல் விழா நடைபெற்றது. இதில் கனிமொழி கலந்துகொண்டு சிறப்பித்தார்.இதனைத ;தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி எம்பி கூறுகையில், அமைச்சர்கள்
�
குடும்பத்தினர் மூன்று மொழி படிக்க வேண்டும், ஏழை குடும்பத்தினர் மூன்று மொழி படிக்க தடையா? என அண்ணாமலை கூறியுள்ளது யாரும் எந்த மொழியையும் படிக்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ, தமிழ்நாடு அரசோ, தமிழக மக்களோ சொல்லவில்லை..ஒரு மொழி திணிப்பு என்று வரும்போது, அதனை எதிர்க்கின்றோம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழியை ஒரு சாய்ஸாக படிக்க வேண்டும் மொழியை திணித்து படிக்கும் போது, வேறு வழியில்லாமல் படிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது இருக்கக் கூடிய
�
வித்தியாசங்களை பிஜேபி முறையாக புரிந்து கொள்ள வேண்டும்.பிஜேபி ஆட்சிக்கு வரும்போது, ஜெர்மன் மொழி சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு அந்த மொழியை எடுத்து விட்டார்கள். சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டு இருக்கிறது. சமஸ்கிருதம் படிக்கும் போது என்ன பயன் என்று நாம் கேட்கலாம். இவ்வாறு மொழி திணிப்பு, ஆதிக்கத்தினுடைய திணிப்பு இதையெல்லாம் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.. அதனால் தான் இந்த இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்றார்.
