தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்குச் சமம். தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு ஆவேச பதில் கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய
�
அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது, இதனால் தமிழ்நாட்டுக்கான நிதியை தர முடியாது என கூறியிருந்தார்.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தக் கருத்துக்கு ரிப்ளை கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர
�
பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மொழி, இன உணர்வு வந்த பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் – சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின்
�
கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.” எனத் தெரிவித்திருந்தார்.
