ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி.. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம், வரிக் கொள்கைகள், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி பரஸ்பர நட்பு பாராட்டினார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.பிரதமர் மோடி பேசுகையில்,
’அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கே திரும்ப அழைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். எனினும், அவர்களுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத கடத்தல் கும்பலை அழிக்கும் பணியை இந்தியா- அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும். இருநாடுகளுக்கும் பரஸ்பரமாக பயனளிக்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
எண்ணெய், எரிசக்தி வர்த்தகம், அணுசக்தி உற்பத்தி, பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.இந்தியா நடுநிலையானதா?
நான் எப்பொழுதும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உடன் நெருங்கிய நட்பு பாராட்டிவருகிறேன். இருநாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன். பலர் இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருக்கிறது என்று தவறுதலாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்தியா நடுநிலையாக இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது. ரஷ்யா அதிபர் புடின் என்னுடன் இருந்தபோது ’இது போருக்கான நேரம் இல்லை’ என்று செய்தியாளர்களிடம் நான் கூறினேன். இன்றும்கூட போருக்கான தீர்வுகளை நாம் போர்க்களத்தில் காணமுடியாது என்பதுதான் எனது நம்பிக்கை. போருக்கான தீர்வு என்பது இரு நாடுகளும் ( உக்ரைன் ,ரஷ்யா) அமர்ந்து அது குறித்து விவாதிக்கும்போதுதான் கிடைக்கும்.
இந்தவகையில், காசா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் ட்ரம்ப் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். எனது ஆதரவை தெரிவிக்கிறேன். கௌதம் அதானிக்கு எதிரான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதா?
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பில் தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,
“ இந்தியா என்பது ஒரு ஜனநாயகநாடு மற்றும் எங்களது கலச்சாரம் “ ‘Vasudhaiva Kutumbakam’ ( இந்த உலகம் ஒரே குடும்பம்) .இந்த உலகத்தையே நாங்கள் ஒரே குடும்பமாகதான் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியர்களும் என்னுடையவர்கள் என்பதை நான் நம்புகிறேன். இரு நாடுகளின் இரண்டு தலைவர்களும் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்னைகளை பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை.” என்று பதிலளித்தார். .இவர் ( நரேந்திர மோடி) என்னைவிட மிகச்சிறந்த பேச்சுவார்த்தையாளர். இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய வளர்ச்சிக்கான மாற்றங்களை மேற்கொள்ள
�
ஆர்வமாக இருக்கிறோம். மேலும், அமெரிக்காவில் உள்ள பயங்கரவாதி தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தும்.பிரிக்ஸ் கூட்டமைப்பு டாலருக்கு நிகராக புதிய நாணயத்தை உருவாக்க நினைத்தால் அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு 100 விழுக்காடு வரிகள் விதிக்கப்படும். ஜி8 கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கியது தவறு. எனவே, மீண்டும் ரஷ்யா ஜி8 கூட்டமைப்பில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளே அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கிறது. அமெரிக்கா பொருட்களுக்கு எந்த நாடு அதிக இறக்குமதி வரியை விதிக்கிறதோ, அதற்கு நிகராக அமெரிக்காவும் வரியை விதிக்கும். ” என்று தெரிவித்தார்.
