வல்லை கடற்கரை பகுதியில் அணி வகுக்கும் வெளிநாட்டு பறவைகள் மக்களை ஈர்த்துள்ளன.
கண்டம் விட்டு கண்டம் தாண்டி குறித்த பறவைகள் யாழ். பகுதிக்கு வருகை தந்துள்ளன.பிளமிங்கோ’ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் யாழ் வல்லை கடற்கரை கடற்கரைப் பகுதிகளுக்கு தற்போது படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.அதேவேளை கடந்த காலங்களில் மட்டக்களப்பில் வெளிநாட்டு பறவைகள் பெருமளவில் வருகை தந்திருந்த நிலையில், தற்போது அவை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
