விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

download-1-37.jpeg

தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்தவகையில், விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு, தமிழ்நாட்டில் விஜய்க்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக கட்சியை அவர் தொடங்கியுள்ளநிலையில், அரசியல் காரணங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு பயணிக்க இருப்பதால், அவரது பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.Y பிரிவில் ஒரு ஆயுதமேந்திய காவலர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். Y பிரிவில் 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவரும், ஸ்டென் கன்-உடன் ஒருவரும் என இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெறுவர். அதாவது 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.இதேபோல், இந்தியாவில் உள்ள புத்த மதத்துறவி தலாய் லாமாவுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததன் அடிப்படையில், அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, தலாய் லாமாவுக்கான பாதுகாப்பு பணியில், மத்திய ரிசர்வ் படையின் 30 கமாண்டோக்கல் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *