சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் இணை ஆணையரே பாலியல் புகாரில் சிக்கியுள்ள சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர்
�
போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், மகேஷ்குமார் ஐபிஎஸ் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் மீதான பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்காக டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து மகேஷ்குமார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
