13 February 2025 Thursday.வியாழக்கிழமை 💐மேஷம்.

479523109_946087381002297_8867325922907573597_n.jpg

13 February 2025 Thursday.
வியாழக்கிழமை 💐மேஷம்.
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.பெற்றோர்களின் ஆசி கிட்டும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வரும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம்.தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. திட்டமிட்ட வேலைகள் தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும்.பண தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நடக்கும்.பெற்றோர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, நேற்றைய பிரச்சனைக்கு இன்று நல்ல முடிவு வரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும்.முன் கோபத்தால் பிரச்சனைகள் தேடி வரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும்.கணவன் மனைவி உறவு பலப்படும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அவப்பெயர் உண்டாகும்.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, அநாவசியச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மனக்குறைகளை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.புதிய வாகன யோகம் உண்டு. சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் இருப்பதால்
கவனம் தேவை.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும்.சகோதரர்களடம் நல் இணக்கம் ஏற்படும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். முன் கோபத்தை தவிற்பது நலம்.துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தேதி
Date 1 – மாசி – குரோதி
வியாழன்
நல்ல நேரம்
Nalla Neram 11:00 – 12:00 கா / AM
00:00 – 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 12:00 – 01:00 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 01.30 – 03.00
எமகண்டம்
Yemagandam 06.00 – 07.30
குளிகை
Kuligai 09.00 – 10.30
சூலம்
Soolam தெற்கு
Therku
பரிகாரம்
Parigaram தைலம்
Thailam
சந்திராஷ்டமம்
Chandirashtamam உத்திராடம் திருவோணம்
நாள்
Naal கீழ் நோக்கு நாள்
லக்னம்
Lagnam கும்ப லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 45
சூரிய உதயம்
Sun Rise 06:35 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi பிரதமை
திதி
Thithi இன்று இரவு 09:01 PM வரை பிரதமை பின்பு துவிதியை
நட்சத்திரம்
Star இன்று இரவு 09:47 PM வரை மகம் பின்பு பூரம்
சுபகாரியம்
Subakariyam மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *