அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கிடையில் சுமார் ஒன்றரை

images-2-10.jpeg

உக்ரைன் – ரஷ்யா, ஹமாஸ் – இஸ்ரேல் : ட்ரம்பின் இருவேறு உத்தரவுகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கிடையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு சாதகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாககவும் கூறப்படுகின்றது.

இதேவேளை நிரந்தர அமைதி மற்றும் சமாதானத்தை எட்டப்படுத்த இந்த பேச்சுவார்த்தைகள் உதவும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆனால் மறுபக்கம் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை எதிர்வரும் சனிக்கிழமை 12 மணிக்கு முன்னர் அனைவரையும் திருப்பி அனுப்பாவிட்டால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக நிறுத்தப்பட்டு மீண்டும் யுத்தம் ஆரம்பமாகும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *