பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், தற்போது நிறுத்த
�
ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வருகின்றன. இதற்கிடையே, பிணைக் கைதிகளில் சிலர் மட்டுமே திரும்ப அனுப்பப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை அனுப்புதை ஹமாஸ் நிறுத்திவைத்துள்ளது. இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக கூறி கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் நிறுத்தியுள்ளது.இந்த சூழலில் ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ”காஸாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணயக்கைதிகள் அனைவரும் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், மிகமோசமான
�
பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன். காஸாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும்” என எச்சரித்திருந்தார்.இந்த நிலையில் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து ஹமாஸின் மூத்த செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி, ”மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. டிரம்பின் பேச்சுகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை கடினம் ஆக்குவது மட்டுமே செய்துள்ளது.
