தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த

images-3-4.jpeg

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த சில முடிவுகளும் முக்கியமான காரணம் ஆகும்.சென்னை – ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,940 ஆகவும்,

இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,667 (1 கிராம்) ஆகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்று உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தங்கத்தின் விலை இனி ஏன் உயரும் 1. அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2. அமெரிக்க

பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,692.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை $2,699.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3. இந்தியாவிலும் தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் பாதுகாப்பான ரியல் பணம் தங்கம்தான். இதனால் மக்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள்.4. அமெரிக்க அதிபர் உலகம் முழுக்க பல நாடுகள் மீது வர்த்தக போரை தொடுத்துள்ளார். வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில்

இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார். 5. சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன. 6. அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும்

நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *