ஜே.வி.பி பொறுப்புக் கூற வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

images-26.jpeg

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதற்கு ஜே.வி.பி பொறுப்புக் கூற வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தீ வைத்ததை பற்றி பேசவில்லை.

இழப்பீட்டுத் தொகையை பட்டியலிடுவதை போன்று தீ வைத்தவர்களின் விபரத்தை அரசாங்கத்தால் பட்டியலிட முடியுமா என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் தனது இயலாமையை மறைத்துக் கொள்ள ஒன்று குரங்குகள் மீது பழி போடுகிறது. அல்லது கடந்த கால அரசாங்கம் தொடர்பான அறிக்கை, பட்டியலை வெளியிடுகிறது. ஆனால் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் மே 09 கலவரத்தில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகையை சிரித்துக் கொண்டே பட்டியலிட்டார்.ஆனால் அவர் ஒருசில விடயங்களை மூடி மறைத்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *