இந்தியா மோசமாக நடந்துகொள்கிறது! டிரம்ப்பிற்கு மெசேஜ் அனுப்பிய.. வெள்ளை மாளிகை

images-1-16.jpeg

இந்தியா மோசமாக நடந்துகொள்கிறது! டிரம்ப்பிற்கு மெசேஜ் அனுப்பிய.. வெள்ளை மாளிகையின் டாப் தலை.. போச்சு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டாப் பொருளாதார ஆலோசகரும், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியுமான கெவின் ஹெசட் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியா மிக மோசமாக அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கிறது. வரி விதிப்பில் இந்தியா தவறாக நடந்து

கொள்கிறது என்று கூறி உள்ளார்.இந்தியாவிற்கு அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவின் வரி விதிப்பு முறைகள் அமெரிக்காவிற்கு எதிராக உள்ளது. வரி விதிப்பை மோசமாக மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டாப் பொருளாதார ஆலோசகரும், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியுமான கெவின் ஹெசட் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவிற்கு வரி மூலமாக அழுத்தம் கொடுக்கும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பை மேற்கொள்ள போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்

தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த எச்சரிக்கையை டிரம்ப் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை அதிக வரி விதிக்கும் நாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் மீது நாங்கள் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறோம், இந்த நாடுகள் பொதுவாக எங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்றாலும்.. தங்களுக்கு தேவையான, தங்கள் நாட்டிற்கு தேவையான செயலில் ஈடுபடுகிறார்கள். பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்து அதன் மூலம் வரும் வருவாயை தங்கள்

நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் நாங்களும்.. பிற நாடுகளுக்கு முக்கியமாக எங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடுகளுக்கு நாங்களும் கூடுதல் வரிகளை விதிப்போம்.மற்ற நாடுகள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சீனா ஒரு மிகப்பெரிய நாடு.. அவர்கள் மற்ற நாடுகள் மீது மிக மிக அதிக அளவில் வரியை விதிக்கிறார்கள். இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகள் இதேபோல் கூடுதல் வரியை விதிக்கிறார்கள். எனவே அமெரிக்காவை முதலிடத்தில் வைக்க நாமும் இனி வரி விதிக்க வேண்டும். இந்தியாவிற்கு எச்சரிக்கை பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா , தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *