சென்னை: புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார். பிப்ரவரி 2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான
�
பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார்.பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து
�
உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் தங்கம், வெள்ளி விலை குறையலாம் என ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம்
�
பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். பிட்காயின் மதிப்பு என்ன? பிட்காயின் மதிப்பு தற்போது 1 லட்சம் டாலரை தாண்டி உள்ளது.இதன் மதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது 106000 டாலர் என்ற நிலையை பிட்காயின் அடைந்துள்ளது. 90 ஆயிரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது 1 லட்சம் டாலரை தாண்டி உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு தற்போது 1.06 லட்சம் டாலரை தொட்டுள்ளது. இதனுடைய மதிப்பு 89,92,568 ரூபாய் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 90
�
லட்சம் ரூபாய். கடந்த சில வருடம் முன் இதன் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே இருந்தது. ஆனால் சில வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 டாலர் வரை இது உயர்ந்தது. இடையில் சில நாள் வீழ்ச்சியும் அடைந்தது. என்ன நடக்கிறது?: நவம்பர் 12 அன்று $90,000 என்ற நிலையை எட்டிய சில வாரங்களில் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பிட்காயினுக்கு ஆதரவானவர்.அந்த நாட்டு அரசு தங்கள் ரிசர்வில் பிட்காயினை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அமெரிக்க அதிபர்
�
டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை (“DOGE”) தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரும் தீவிரமாக பிட்காயின் ஆதரவாளர் என்பதால் அதன் மதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
