கோவிலை அபகரிக்கும் நடிகர் வடிவேலு? மொத்தமாக திரண்டு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.. பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனது குலதெய்வமான அய்யனார் கோவிலை நடிகர் வடிவேலு அபகரிக்க முயல்வதாக கூறி கிராம மக்கள் ஒன்றாக திரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தமிழ் சினிமாவில்
�
முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். சில காலம் படங்கள் இன்றி நடிகர் வடிவேலு இருந்தார். தற்போது மீண்டும் நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.வடிவேலு கடவுள் பக்தி கொண்டவர். இதனால் அவ்வப்போது அவர் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் சென்று வருவது வழக்கம். அதேபோல் தனது குலதெய்வ கோவிலுக்கும் வடிவேலு சென்று பூஜை செய்து வழிபாடும் செய்து வருகிறார்.நடிகர் வடிவேலுவின் குலதெய்வ
�
கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை தான் நடிகர் வடிவேலு அபகரிக்க முயன்றுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் வடிவேலு தனது ஆதரவாளர் ஒருவரை கோவிலில் பரம்பரை அறங்காவலராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அவர் அந்த கிராம மக்களிடம் அவர் கலந்து பேசவில்லை எனக்கூறி இன்று திருவேட்டை உடைய அய்யனார் கோவில் முன்பு அந்த கிராம மக்கள் பலர் திரண்டு வந்து நடிகர் வடிவேலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
