பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணம் ஜூன்லியன் கவுன்டி என்ற இடத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் புதையுண்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் நிலச்சரிவில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீண்டநேர தேடுதல் பணிக்கு பிறகு 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மாயமான 30 பேரை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
