எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை ராணுவ பலத்துடன் ஆக்கிரமிக்க உள்ளதாக கூறிய கருத்தை திரும்பப் பெற மறுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் எதிர்வினையாற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் “இறையாண்மையில்” அத்துமீற மற்ற நாடுகளை அனுமதிக்காது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று, டிரம்ப் தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை வசப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். இது அமெரிக்காவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு “முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், பிரெஞ்சு வானொலியில் பேசுகையில், ஐரோப்பிய ஒன்றியம் உலகின் பிற நாடுகள் அதன் இறையாண்மையில் அத்துமீறுவதை அனுமதிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்காது” என்றார்.
பரந்து விரிந்த ஆர்க்டிக் தீவில் அமெரிக்கா படையெடுக்கப் போகிறது என்பதை நம்ப முடியவில்லை என்று பரோட் கூறினார்.
