தி.மு.க., 90 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது

476832913_943194661291569_620887289009719867_n.jpg

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., 90 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது.ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் காலமானதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., தே.மு.தி.க., கட்சிகள் தேர்தலை

புறக்கணித்தன. காங்., தொகுதியை பறித்து, வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க., நிறுத்தியது. நா.த.க., சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் என, 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5ம் தேதி, அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது.மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடந்தது. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த ஓட்டு

எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.அவர், ஒட்டுமொத்தமாக 1,14,439 ஓட்டுகள் பெற்று வெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 23, 810 ஓட்டுகள் டெபாசிட் இழந்தார். இதன் மூலம், சுமார் 90 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சந்திரகுமார் வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் விழுந்தன.
கடந்த தேர்தலில்…!

கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன்- 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *