பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்புபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பழனி
�
அடிவாரம் திருவாவினன்குடி கோயில் எதிரே உள்ள சன்னதி வீதியில் உணவகங்கள், பூஜை சாமான் விற்பனை கடை, டீக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் இன்று அதிகாலை சன்னதி வீதியில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடைகளின் முன்பகுதியில் பற்றி எரிந்த தீயை அனைத்த நிலையில், பூஜை சாமான் கடை என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
