சுதந்திர தினத்தன்று , தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியை ஏற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகிறது ஆனால் வடக்கு கிழக்கு மக்களுக்கு இன்னும் அது ஏற்றப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திரம் அனைத்துமே துக்கதிலும் கருப்பு தினம்.
சர்வேந்திர சில்வா அவர்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியை ஏற்றியமை தேசிய கொடியை அவமதித்த செயலாகும். அதனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் , அதற்கு அனுமதித்த , பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசியர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அவர்களிடம் விளக்கம் கோர வேண்டும். நாட்டின் தேசிய கொடியை ஏற்க மறுப்பவர்கள் தேச துரோகிகளே அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .