சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது தடை விதித்து நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த உத்தரவில் “அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடான இஸ்ரேல் மீது ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை ஐசிசி சுமத்துவதாக” அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்கக் கூட்டாளி நாடுகளில் உள்ளவர்கள் மீது ஐசிசி விசாரணை மேற்கொள்வதற்கு துணைபோகும் நபர்கள் மீது நிதி மற்றும் விசா தடையை அறிவித்துள்ளார் அவர்.
வாஷிங்டனுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகை தந்த பிறகு இப்படியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
