உயிர்த்த ஞாயிறு சம்பவம்; எனக்கு எதுவும் தெரியாது; கையை விரிக்கும் கோட்டாபய இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பதிலளித்துள்ள கோட்டபய ராஜபக்ச,சிஐடி அதிகாரிகள் சமர்ப்பித்த ஆதாரங்கள் உட்பட பல விடயங்களை உள்ளடக்கியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவுசெய்து வாசியுங்கள் என பதிலளித்துள்ளார்.
அந்த அறிக்கையில் இருக்கும் விடயங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
