லைகா தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி – நடிகர் அஜித் குமார் கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி இருந்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 ஸ்கிரீனில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். இதேபோல் பல ஊர்களில் ரசிகர்கள்�
குவிந்துள்ளனர். ஆரவாரத்துடன் படம் பார்த்து ரசித்து வருகிறார்கள்.இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார். நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்ததால் அதிக
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. லைகா தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருந்தது. இப்படம் சுமார் 100 ஸ்கிரீனில் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 99 சதவீத தியேட்டரிலும் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2
மணிக்கு ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தியேட்டர்களில் முதல் காட்சி காலை 9மணிக்குத்தான் வெளியானது. ஆனால் பல திரையரங்குகளில் அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் அதிகாலையிலேயே மிகப்பெரிய அளவில் குவிந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தியேட்டரே களைகட்டியிருந்தது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பெங்களூரில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
