இந்தியர்களை நாடு கடத்த.. டிரம்ப் எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா? ஷாக் அமெரிக்காவில் அத்துமீறி குடியேறிய இந்தியர்கள் பலர் மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்காக “முதல் பேட்ச்” விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.சட்டவிரோத�
இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் நேற்று முதல்நாள் அதிகாலை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம்,
அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது. அதன்படி டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 140+ இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானம் நேற்று முதல்நாள் அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி இந்த விமானம் வந்த நிலையில் நேற்று தரையிறங்கியது. இந்த நாடுகடத்தலானது இறுதி கிடையாது..
திட்டமிடப்பட்ட பல நாடு கடத்தல் பிளான்களில் இதுவும் ஒன்று. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்த ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.நாடு கடத்தல் பணிகளுக்குப்
பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின்
துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்: டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
