திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியில் தரணி ராஜன் என்பவர் சில ஆண்டுகளாக கொட்டகைகள் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், தரணி ராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3500 கோழிக் குஞ்சுகளை பண்ணையில் வளர்த்து வந்துள்ளார்.
இன்று காலை கோழிப் பண்ணையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது, இதனை கண்ட பண்ணையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரடி போராடி தீயை அணைத்தனர்,அதற்குள் கொட்டகை மற்றும் 3500 கோழிக் குஞ்சுகள் மற்றும் தீவனப் பொருட்கள் என ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
