மஹிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

download-1-11.jpeg

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மறந்துவிடுகிறார். தற்போதைய ஜனாதிபதி எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தால் கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு செல்ல தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ச வீட்டை விட்டு செல்ல வேண்டும் அல்லது மாத வாடகையாக 4.6 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

நளிந்த ஜெயதிஸ்ஸவின் கோரிக்கை

இதற்கிடையில், இலங்கை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள் மஹிந்த ராஜபக்ச முறையான எழுத்துப்பூர்வ கோரிக்கைக்காக காத்திருக்காமல் வீட்டை விட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.30,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட, மாதந்தோறும் ரூ. 4.6 மில்லியன் வாடகை செலவு கொண்ட மாளிகையில் இருவர் வாழ்வது பொதுமக்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது.மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்களும் அரச வளங்களை மாத்திரம் நம்புவதற்குப் பதிலாக தங்கள் பெற்றோரை தாமே கவனித்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளின் சலுகைகளை நீக்குவதும் குடிமக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதும் அரசாங்கத்தின் பணியாகும் என்று ஜெயதிஸ்ஸ திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *