இலங்கைக்கு இடையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக

475794620_941606514783717_957603873278765772_n.jpg

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று பெப்ரவரி நான்காம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இங்கு இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களில் முக்கியமான பிரிவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கு இடையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட இணைப்பாளர் இலங்கையின் சுதந்திர தின தொடர்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இந்நாட்டின் அரசாங்கம் முன்னெடுக்கும் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பான நடவடிக்கைகளிற்கு பாராட்டு தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி, விவசாயம், காலநிலை மாற்றம் சமாதானத்தை கட்டி எழுப்புதல் மற்றும் பாலின சமத்துவமின்மை உட்பட ஒன்பது பிரதான பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக ஒன்றிணைந்து பதில் தேடுவது தொடர்பாகவும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *