அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக “முதல் பேட்ச்” விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம். ஆனால் இந்தியா இதுவரை இதில் நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை இந்திய அரசு அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை நேரடியாக இதுவரை எதிர்க்கவில்லை.ஒரு நாட்டின் ராணுவ விமானம் நாடு கடத்தும் மக்களை கொண்டு வருவதை அந்த நாடு எதிர்க்க வேண்டும். ஆனால் இந்தியா இதை
இதுவரை எதிர்க்கவில்லை.அமெரிக்க ராணுவம் விமானம் இந்தியாவிற்குள் அனுமதியோடுதான் வந்துள்ளது என்றாலும் கூட இந்தியர்களை நாடு கடத்தி கொண்டு வருவது மிகப்பெரிய நிகழ்வு.. இதை இந்திய வெளியுறவுத்துறை இதுவரை எதிர்க்கவில்லை. 4. பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை இந்தியா ஒன்றும் வலிமை இல்லாத நாடு கிடையாது. சர்வதேச அரசியலில் நல்ல பவர் கொண்ட நாடு. அப்படிப்பட்ட இந்தியா இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்று இல்லை.. குறைந்த பட்சம் இதில் ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம். 6. ஆனால் இதுவரை இந்தியா சார்பாக அதிரடி எதிர்ப்பு அல்லது கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இந்த விவகாரத்தில் கொலம்பியா காட்டிய எதிர்ப்பை
கூட இந்தியா பதிவு செய்யவில்லை. அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளையும் கூட அவர் விதித்து உள்ளார்.அமெரிக்காவில் 4 விதமான மக்கள் அதிக அளவில் அகதிகளாக, ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். இவர்களை எல்லாம் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதியில் ராணுவம்
களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ளே அகதிகளை, அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. டிரம்ப் பதவிக்கு வந்து சரியாக 5 நாட்களுக்குள் பெரிய அளவில் அங்கே ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
