கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகள், குறிஞ்சி. இவர், தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் குறிஞ்சி, சாய்குமார் என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவரது
தாய் மல்லிகா, மகள் குறிஞ்சியை கண்டித்ததாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்த குறிஞ்சி, தாய் மல்லிகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அதனை அடுத்து தாய் மல்லிகா, மகள் குறிஞ்சியை மிரட்டுவதற்காக முட்டை பொரியலில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது முட்டை பொறியலை
சாப்பிட்ட குறிஞ்சி, வாயில் நுரைதள்ளியபடி கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மற்றும் தந்தை முனுசாமி ஆகியோர், ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட வட பொன்பரப்பி காவல்துறையினர், தாய் மல்லிகாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
