வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முக விநாயகர் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வு.

images-1-5.jpeg

வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முக விநாயகர் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வு.

நாகர் கால ஆலயமாக திகழும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முக விநாயகர் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ் ஞாயிற்றுக்கிழ(02.02.2025) வைபவ ரீதியாக நடைபெற்றது.

வந்தாறுமூலை ஸ்ரீ நிருமுக விநாயகர் ஆலய நிர்வாக சபை தலைவர் எஸ்.பம்மக்குட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உழவர்கள் தாங்கள் வேளாண்மையினை செய்து அதனை புது ஆண்டில் அறுவடை செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை இறைவனுக்கு முதல் அர்ப்பணித்த பின் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வந்தாறுமூலை மக்களிடையே தொன்று தொட்டு நடைபெற்று வருகிற ஒரு பாரம்பரிய முறையாக காணக்கூடியதாக இருந்து வருகின்றது.

அதுபோல் இம்முறையும் வந்தாறுமூலை ஸ்ரீ நிர்முக விநாயகர் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வு மிகவும் சிறப்புற நடைபெற்றது.

வயலில் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்து எடுத்து வந்து பின்னர் ஸ்ரீ நிர்முக விநாயகரிடத்தில் வைத்து வழிபாடு செய்வது அக்கிராம மக்களின் நீண்காலமாக இருந்து வருகின்ற ஒரு பாரம்பரிய முறையாக காணப்படுகின்றது.

பின்னர் அக்கிராம மக்கள் புதிதாக அறுவடை செய்யப்பட்டு ஆலயத்திற்கு கொடுவந்து அதனை சுவாமிக்குச்சாத்தி வழிபாடுகள் செய்த பின்னர் நெல் மற்றும் நெற்கதிர்களை ஆலயத்திலிருந்து தத்தமது வீடுகளுக்கு புதிராக எடுத்துச் செல்வார்கள்.

கிராமத்தில் உள்ள அனைவரும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிராமத்துக்குள் கொண்டு வருவது கட்டாயமான ஒரு விதிமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறனர். அந்த வகையில் ஆலயத்திற்ககான புதிய நெல்லை வந்தாறுமூலையைச் சேர்ந்த விவசாயி இளையதம்பி குமாரவேல் அவர்களும் வைரமுத்து மாணிக்கவாசகம் அவர்களும் இம்முறை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *