இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா

475527687_926861526096986_4588293572098862626_n.jpg

இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா.!!
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் வவுனியா – ஈரப்பெரியகும் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக ஏ – 9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன், அவரது 27 வருட நீதித்துறை சேவையைப் பாராட்டிய வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் ஆகியோர் கௌரவிப்புக்களையும் வழங்கினர்.

நீதித்துறையில் 27 வருடத்தைப் பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அரசின் இழுத்தடிப்புகளாலும், காலதாமங்களாலும் அவர் ஓய்வுநிலைக்குச் செல்கின்றார்.
இருப்பினும் அந்தப் பதவி நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *