தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டாம்கோ) தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் எனவும், இதற்கான
விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு வீடு கட்டுதல், கல்வி உதவித்தொகை மற்றும் தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு 30 லட்சம் வரை தனிநபர் கடன் பெற
விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சுய தொழில் தொடங்குபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது என அறிவித்துள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தனி நபர் கடன் திட்டத்தின் ரூ.30.00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு தனி நபர்களுக்கு சுயமாக தொழில் / வியாபாரம் செய்ய / கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. தகுதிகள் :1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும். 2. விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.