சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு

475754669_938319738445728_8512578373593140673_n.jpg

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு, பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க

தொடங்கியுள்ளார். இதற்காக, இன்று காலையில், பட்ஜெட் ஆவணங்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார் பின்னர், பட்ஜெட் தாக்களுக்கு முந்தைய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தொடர்ந்து, நாடாளுமன்ற

மக்களவையில் மத்திய பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இருப்பினும் இடையே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் அமளிக்கிடையே நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றங்கள் வருமா? புதிய வருமானவரி நடைமுறையில் என்னவிதமான மாற்றங்கள் வரும் என்பது நடுத்தர, உயர் நடுத்தர பிரிவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8 ஆவது பட்ஜெட்டாகும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *